கடலோரக் காவியமே அமேசான் லிங்

ஹாய் டியர்ஸ்...
தாஸ் ரெஜினாவுக்கும் சேர்த்து நாவலை முழுசா எழுதி அமேசான்ல போட்டாச்சு.
படிச்ச்ட்டு ஸ்டார்ஸ் போட்டுவிடுங்க டியர்ஸ்❤️????????????
டீஸர் 1
“ஏங்க எதுக்கு ஜார்ஜ் பையன் தாஸ்மேல திருட்டுக்கேஸ் குடுத்தீங்க? அவரைப் பத்திதான் தெரியும்ல. ஏதாவது எடக்குமடக்கா செய்து வைச்சுட்டாருன்னா என்ன பண்ணுவீங்க?அவருக்கு பிள்ளைங்கன்னா உசுரு. அவங்களுக்காக எது வேணும்னாலும் செய்வாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சும் இப்படிப் பொய் கேஸ் குடுத்திருக்கீங்களே?”
“சும்மா இருடி நான் அப்படி கேஸ் குடுத்ததுனாலதான் ஜார்ஜ் சும்மா இருக்காரு.இல்லைன்னா என்னைத்தான் போலீஸ்ல மாட்டிவிட்றுப்பாரு. வட்டிக்கு கொடுக்கறதும் தப்பு அதுக்கு வட்டி போட்டு வாங்குவதும் தப்பு அதைவிட அதிக வட்டி கொடுத்து அதுக்காக குருசு வீட்ல இருந்து வலையை எடுத்துட்டு வந்து தப்புன்னு எனக்கு தெரியும். அதான் சாட்சியோட போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டாங்கன்னா அவ்வளவுதான் என்ன பிடிச்சு உள்ள போட்றுவாங்க. அதுக்கு பதிலாதான் நம்ம ரெஜினா செயினை அத்துட்டுப் போயிட்டான்னு கேஸ் கொடுத்திருக்கேன்”
“அவங்க வீட்ல இல்லாத பேரும் பணமுமா உங்க வீட்ல இருக்கு, போயும் போயும் நம்ம வீட்டு பிள்ளைக் கிட்ட இருந்தா அந்த பையன் திருடுவான்னு யாரும் யோசிக்க மாட்டாங்களா என்ன நீங்க?”
“யோசிக்கிறாங்களோ இல்லையோ நம்ம கேஸ் குடுத்து வைப்போம், வந்தா பத்து பவுனு இல்லையா அந்தப் பையனுக்கு ஜெயிலு. இதுக்கு அப்புறம் ஜார்ஜ் நம்மகிட்ட எந்த வம்புக்கும் வரமாட்டான். நம்ம வட்டி பிசினஸிலயும் தலையிடமாட்டான். எதுவா இருந்தாலும் நமக்கு நல்லதுதான். இப்போ வந்து படுத்து தூங்கு காலைல கேஸ் என்ன ஆச்சுன்னு பாத்துக்கலாம்” என பேசி முடித்து லைட்டை அணைத்துவிட்டு தூங்க சென்று விட்டனர்.
“யோவ் வாத்தி நீ மாட்டாம இருக்கணும்னு என்னை மாட்டிவிட்டப்பாரு. இதுல உன் பொண்ணு அந்தக் குள்ளக்கத்திரிக்காய் என்னா மாதிரி துள்ளுச்சு.இருய்யா இரு உனக்கு வைக்கிறேன் ஆப்பு”என்று நினைத்தவாறு பின்னப்பக்கம் மாடி வழியாக ஏறி உள்ளே குதித்துவிட்டான்.
தாஸ் ஒவ்வொரு அறையாகப் போய் பார்த்துவிட்டு ரெஜினா தூங்கும் அறையை கண்டுப்பிடித்துவிட்டான்.
“வாடி என் குள்ளக்கத்திரிக்காய். உன்னை வைச்சுத்தான்டி உங்கப்பனுக்கு பாடம் எடுக்கணும். வட்டிக்குடுக்கிறதே தப்பு இதுல வட்டிக்கு வட்டி அதுக்கு குட்டின்னு பாவப்பட்டவங்க வலையைத் தூக்கிட்டு வந்துட்டானே உங்கப்பன். அவனுக்கு இருக்கு” என்று மெதுவாக போய் முன் வாசலை திறந்து வைத்துவிட்டு தனது தம்பிக்குக் கைக் காண்பித்தான்.
அவன் ஜீப்பினை ரெடியாக எடுத்து நிறுத்தியிருந்தான்.டேவிட் வாத்தியாரின் ரூமைப்போய் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வந்தான்.
ஓடிப்போய் அப்படியே தூங்கிக்கொண்டிருக்கும் ரெஜினாவைத் தூக்கித் தோளில் போட்டான்.
அதுக்குள் அவள் முழித்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து “ஏய்ய் யாருல நீ? என்னை எதுக்குல தூக்கிட்டுப்போற? அப்பாஆஆஆஆஆ அப்பாஆஆஆஆ காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று கத்தினாள்.
“ஐயோ! ஐயோ! என்பொண்ணு சத்தம் கேட்குது.என்ன நடக்குது?” என்று பதறி எழுந்து டேவிட்டும் ரோஸியும் அடிச்சுப்பிடிச்சு எழுந்து ஓடிவந்துக் கதைவைத் திறந்தார்கள்.அது திறக்கவில்லை.
“ஐயோ ஐயோ யாருல அது எங்களை யாரு உள்ள வைச்சுப் பூட்டுனது?என்று கதறி சத்தம்போட்டனர்.
“வாத்தி நான்தான் பூட்டினது. என் மேலயேவா பொய் கேஸ் குடுக்கிற? ஜார்ஜ் மவன் தாஸுன்னா உனக்கு யாருன்னுக் காண்பிக்க வேண்டாமா அதுதான் உன் மவளைத் தூக்கிட்டன் டோய். இப்போ கதறு” என்றவன் தன்னை அடிக்கும் ரெஜினாவின் கையைப்பிடித்து வைத்துக் கொண்டான்.
“லேய் காட்டான்ப்பயலே என்னை எதுக்கு தூக்கிட்டுப்போற? இறக்கிவிடுறா!”என்று பயத்தில் கத்தினாள்.
“நான் காட்டான்ப்பயல உனக்கு? குள்ளக்கத்திரிக்கா பாவப்பட்ட ஒருத்தன் வலையைத் தூக்கிட்டு வந்தது உங்கப்பன்.அதை நியாயமா எடுத்துப்போய் குடுக்க வந்த என்னை குறுக்காலப் புகுந்து அடிக்க வந்தது நீயும் உங்கப்பனும். கடைசில உங்கப்பன் உன் கழுத்துல கிடந்த பத்துப்பவுனு சங்கிலியை திருடிட்டுப் போயிட்டான்னு கேஸ் குடுத்திருக்கான் உங்கப்பனுக்கு எவ்வளவு திமிரு இருக்கணும். அதுதான் அவரு மவளயே தூக்கிட்டுப் போறேன்”
“திருட்டுக்கேஸுலயாவது வெளிய வந்திடலாம் பொண்ணுக்கேஸ்ல களிதான் திங்கணும்ல விடுல என்னை” என்று கைகாலை உதைத்தவளைத் தூக்கி ஜீப்புக்குள்ள போட்டு கடத்திட்டுப் போனான்.
அவளை ஹார்பர்ல நின்றிருந்த ஒரு போட்டுல கட்டிவைச்சு அர்த்த இராத்திரியில கடலுக்குள்ளக் கொண்டுப்போய்விட்டான்.
டேவிட் வாத்தியார் வீட்ல ஏதோ சத்தம் கேட்குது என்று அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து ரூமுக்குள்ள பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டுபேரையும் திறந்து விட்டனர்.
அவர் சொன்ன தகவலின் பெயரில் இப்பொழுது போலீசாருக்கு போன் பண்ணி வரவழைத்து விட்டனர்.
ஜார்ஜ் மவன் தாஸ் என் மகளைத் தூக்கிட்டுப்போயிட்டான் என்று சொன்னவருக்கு தலைகுனிவாக இருந்தது.
வயசுப் பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கிற பொண்ணை வேற சமுதாயத்துப் பையன் தூக்கிட்டுப்போயிட்டான்னு தெரிஞ்சா யாரு கல்யாணம் பண்ணிக்க வருவா? என்று கலங்கிப்போய் போலீஸில் சொல்லிக்கொண்டிருந்தார்.
“இன்ஸ்பெக்டர் சார் தயவு செய்து என் மகளை மீட்டுத்தாங்க” என்று அழுதார்.
@@@@@@@@
தேவா மனைவியையும் மகளையும் தேடுகிறான் என்று
ரீனாதான் ”அண்ணே நித்திலாவையும் பாப்பாவையும் காணோம்ண்ணே! அதுதான் தேடிட்டிருக்கோம்”என்றதும்தான் தன் நெற்றில் அறைந்து கொண்டான்.
"முட்டாள் முட்டாள் மறுபடியுமா? என்னை நிம்மதியாகவே வாழ விடமாட்டாளா? என்று அங்கலாயத்தவன் ஓடிப்போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு தேடியலைந்தான்.
நித்திலாவோ தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் பஸ்ஸில் சீட்டில் சாய்திருந்தாள்.
அவளது படுத்திருந்த மகளோ அழுத களைப்பில் தூங்கிவிட்டாள். ஆனால் நித்திலாவின் கண்களிலோ வற்றாத நீருற்றுபோல கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது.
மனதின் விரக்தி தைரியத்தை வரவழைத்திருந்தது, அதனால்தான் பிள்ளையை தோளில் போட்டவள் அங்கிருந்து நடந்தே வந்துக் கிடைத்த பஸ்ஸில் ஏறி திருநெல்வேலிக்கு வந்துவிட்டாள்.
“யாருவேணாலும் என்னவும் சொல்லிருக்கட்டும் தன்னை முழுதாக நம்ப வேண்டியவனே நம்பலையே! பிள்ளையை கொடுத்துட்டு போக சொல்றாங்க. என்னை பிரிஞ்சு அவங்க மட்டுந்தான் கஷ்டப்பட்டாங்களா? என்னோட மனசு ரணமா இருக்கே அதுக்கு யாரு மருந்து போடுவது? அவங்களைப் பிரிந்து நான் இப்போவரைக்கும் கஷ்டப்படுறனே. அவங்களுகாகாவது ஆறுதல் சொல்லித் தேற்ற மொத்தக் குடும்பமும் இருந்தாங்க.எனக்கு யார் இருந்தா? என்று யோசித்துக்கொண்டிருந்தவள் மகளின் பூ முகத்தைப் பார்தது வருடிக் கொடுத்தாள்.
“இனி நமக்கு உங்க தாத்தாகூட வேண்டாம். எனக்கு நீ உனக்கு நான் நமக்கென ஒரு உலகம் போதும். யாருக்கிட்டயும் போய் நம்ம வேண்டாதவங்களா ஒட்டிக்கிட்டு இருக்கவேண்டாம் செல்லம். மூணு வருஷத்துக்கு மேல தனியாகத்தானே இருந்தோம். இனியும் அப்படியே இருப்போம்” என்று தீர்மானித்தவள் கண்ணீரைத் துடைத்து கொண்டாள்.
திருநெல்வேலி போய் சேர்ந்தவள் ஆட்டோ பிடித்துக்கொண்டு வீட்டிற்குப் போனாள்.
அந்த வீட்டில்தான் மகள் பிறந்தாள்.அந்த வீடுதான் தன்னை தனியாக வாழப்பழக்கித் தந்தது என்று அப்படியே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தாள்.
அதன்பின் எழுந்து கண்ணீரைத் துடைத்துவிட்டு தனது படிப்பிற்கான சான்றிதழ் முதற்கொண்டு மகளுக்கானது வரை எல்லாம் எடுத்து வைத்தாள்.தன் பிள்ளைக்கு தேவையானதை எடுத்து வைத்தாள்.அப்படியே தன் மகளின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். அவள் அழுத களைப்பும் மனதின் பாரமும், பிரயாணம் செய்ததும் சேர்த்து அவளை அறியாமலயே தூக்கம் வரவும் தூங்கிவிட்டாள்.
இரவு நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவளுக்கு பயங்கொடுத்தது. இந்த நேரத்துல யாரு என்று யோசித்தவள் கதவைத் திறக்காது இருத்தாள்? அது மாமானார் வாங்கிக்கொடுத்த வீடுதான் சுற்றியிருப்பவர்கள் அவருக்கு தெரிந்தவர்கள்தான். இதுவரை இப்படி இரவில் கதவை யாரும் தட்டினது இல்லையே! புதுசா இருக்கே? திருடனாக இருக்குமோ? என்று பயந்து கதவைத் திறக்காமல் பயத்தில் இருந்தாள்.
" பட்டு குட்டி தாத்தா வந்திருக்கேன் குட்டி அம்மாவை கதவை திறக்கச் சொல்லுங்க" என்று கேட்டதும்தான் ஹப்பாடா என்றிருந்தது.
நித்திலாவுக்கு அப்போதான் மூச்சே திரும்ப வந்ததுபோலிருந்தது.அவள் எழுந்து கதவை திறப்பதற்குள் குழந்தை அவரது சத்தம் கேட்டு எழுந்துவிட்டாள்.
“தாத்தாஆஆஆ தாத்தாஆஆஆ”என்று கத்தி அழத்தொடங்கினாள்.
நித்திலா கதவை திறக்கவேண்டாம் என்றுதான் இருந்தாள். மகளது அழகை கூடிக்கொண்டுப்போகவும் மெதுவாக எழுந்துக் கதவைத் திறந்தாள்.
சின்னப்பதாஸ் கோபத்தில் நின்றிருந்தார். அவருக்குப் பின்னாடி தேவாவும் வந்துநின்றான்.
தாஸைக் கண்டதும் குழந்தை தாவி தாத்தா என்று அவரிடம் ஓடியது.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு தாள் வீட்டிற்குள்ளே சென்றார். தேவா எதுவும் பேசாது அங்கயே நின்று நித்திலாவையேதான் பார்த்திருந்தான்.
தேவா தன்னையே பார்ததுக்கொண்டிருப்பதை உணர்த்தவள் எப்போதும் போல தன் இமைகளை தாழ்த்தி நிலம் பார்த்து நின்றாள்.
வீட்டைச் சுற்றிப்பார்த்த தாஸ்” நாங்க இப்போ இங்க வரலைன்னா இரண்டுபேரும் காலையில எங்கேயாவது போயிருப்பீங்க போல? எல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கீங்க.என்ன பட்டு குட்டி தாத்தாவை விட்டுட்டுப் போக ரெடியாயிட்டீங்க போல?” என்று பார்வை தன் பேத்தியிடமும் வார்த்தைகள் மருமகளை நோக்கியும் இருக்க பேசினார்.
"நாங்க யாருக்கும் பாரமா இருக்க விரும்பல ? நாங்க இங்க இருந்தா இனி சரிவராது மாமா. எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்" என அவரது முகத்தைப் பார்க்காது குனிந்தேவாறே பதில் சொன்னாள்.
அதைக் காதில் வாங்காது "பேக் பண்ணினது அப்படியே இருக்கட்டும், நம்ம வீட்டுக்கு இப்போ போகலாம் உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ,பட்டு குட்டி நாம நம்ம வீட்டுக்கு போவோமா?”" என்று பேத்தியிடம் தலையாட்டிக் கேட்க, அவளும் தலையை வேகமாக ஆட்டினாள்.
நித்திலா அசையாது நின்றாள்.
"என்னம்மா பிரச்சனை? எதுக்கு இப்படி அமைதியாகவே நிக்கிற? எந்த இடத்துல அமைதியா இருக்கணுமோ அங்கதான் அமைதியாக இருக்கணும். பேசவேண்டிய இடத்துல பேசிடணும். எல்லாத்தையும் சகிச்சு போனதால என்ன நடந்துச்சு ஒன்னும் நடக்கல. உன்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்குத்தான் பிரச்சனையாச்சு. இப்போவாவது உங்க வாழ்க்கையை வாழுப்பாருங்க. சீக்கிரம் எல்லாம் எடுத்துட்டுக் கிளம்புங்க”
“இல்லை நாங்க அங்கஸவரல மாமா.வேண்டாம் நாங்க இப்படியே இருந்திடுறோம் நான் அந்த வீட்டை விட்டு வரும்போது போகாதிங்கன்னு தடுத்துக்கூட எங்களை யாரும் பிடிக்கலை, அங்க எல்லாரும் என்னைதான் தப்பா நினைச்சு பேசலை; வா அப்படினுக்கூட கூப்பிடலை; ஆனா பட்டுகுட்டி என்ன தப்பு செஞ்சா? அட்லீஸ்ட் அவளை தூக்கி கொஞ்சறதுக்கு எது தடையா இருந்துச்சு? என்று கேட்டவள் தன் கண்ணை சுழட்டி தேவாவைப் பார்த்தாள்.
அதைக் கேட்டவன் வேகாம எழுந்து உள்ளே வந்தவன் அவளை நோக்கி அடிடிக்கக் கையோங்கிருந்தான்.
“நான் பிள்ளைய தூக்கலைனு குத்திக்காட்றியா? மனுஷியாடி நீ உன் இஷ்டத்துக்கு விட்டுட்டுப் போவ, இப்படி ஒருத்தி இல்லை செத்துப்போயிட்டானு மனசை தேத்தி உயிரோடவாவாது இருக்கலாம்னு வாழ்ந்திட்டிருக்கேன். இப்போ பிள்ளையோட வந்து நிக்குற எனக்கும் என் மனசுக்கும் அதை ஏத்துக்க டைம் கொடுக்க வேண்டாமா?நீ வேணா உங்கப்பன் அந்த சொட்டைத் தலைக்கூட போ நான் என் பெண்ணை என்னோட கூட்டிட்டு போறேன்.நீ எங்கயாவது போய்டு என் கண்ணுல முழிக்காத. செத்துப்போனாக்கூட செத்துட்ட ன்னு நிம்மதியா இருப்பேன்” என்று கத்தியவன் பிள்ளையை தன் தகப்பனிடமிருந்து தூக்கி கொண்டு காருக்குள் போய் உட்கார்ந்துக்கொண்டான்.
பட்டு குட்டி போட்ட அழுகையில் என்ன செய்யவென தெரியாமல் மறுபடியும் கொண்டுவந்து சின்னப்பதாஸிடம் கொடுத்துவிட்டு நித்திலாவை முறைத்துக்கொண்டு நின்றான்.
சின்னப்பதாஸிற்கே பொறுமை இல்லாமல் போயிட்டு “போய் தேவையானதை எடுத்து வச்சிட்டு வாம்மா. நம்மா வீட்டுக்குப் போகலாம்.என் காலத்துக்குள்ள நீங்க நல்லா வாழ்றதையாவதுப் பார்க்க வேண்டாமா?எனக்காக கொஞ்சம் சமாதானமாகுங்க என்றவர் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே போய்விட்டார்.
தேவா அங்கிருந்த சேரில் அமைதியாக கண்மூடி உட்கார்ந்திருந்தான். அவள் நடந்துபோறது தெரிந்தது.ஆனால் அவளது கொலுசின் சத்தமில்லை.
கண்ணை முழித்துப் பார்த்தவன் அவள் குழந்தைக்கு உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“பிள்ளை மட்டுமில்லைன்னா உன்னை பார்த்தவுடனே கொன்னு போட்டிருப்பேன். இந்த வரைக்குமாவது என்னோட காதலையும் அன்பையும் மதிச்சியே! பிள்ளை விசயத்துலயாவது கொஞ்சமாவது உன் நெஞ்சில ஈரமிருந்துச்சே! அதுவரைக்கும் சந்தோஷம்” என்று வார்த்தைகளால் அவளை உயிரோடு கொன்றான்.
இங்கிலாந்து லிங்
https://www.amazon.co.uk/dp/B0DZ19KRS7
அமெரிக்கா லிங்
https://www.amazon.com/dp/B0DZ19KRS7
இந்தியா லிங்